2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)


யாழ். வட்டு வள்ளியம்மை வித்தியாலய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. கட்டுநாயக்கா விமான நிலைய சுங்கதிணைக்கள உத்தியோகத்தரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில், யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க மாணவர்களுக்கான உபகரணங்களை வழங்கி வைத்தார்.

வட்டுக்கோட்டை வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியாலயத்தில் இன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வில், வறிய மாணவர்கள் 140பேருக்கு சுமார் 1 மில்லியன் ரூபா நிதியில் பாடசாலை உபகரணங்கள் மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம், விளையாட்டு உபகரணங்கள் உட்பட வர்ண பூச்சுக் கலவை என்பன வழங்கப்பட்டன.

கட்டுநாயக்க சுங்கத்திணைக்கள உத்தியோகத்தர்களின் நிதி பங்களிப்பின் மூலம் இக்கற்றல் உபகரணங்கள் மற்றும் இதர உபகரணங்களை வறிய மாணவர்களுக்கு வழங்கும் நோக்கத்துடனேயே கையளிக்கப்பட்டன.

இதன்போது, மாணவர்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில், வட்டு. வள்ளியம்மை வித்தியாலய அதிபர் எஸ்.சுபாஸ்கரன், சுங்கத்திணைக்கள இணைப்பாளர் அசங்க, மற்றும் குமார, அருண, ஹசும், உள்ளிட்ட சுங்க அதிகாரிகள், மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் பிரதி கல்வி அமைச்சர் ப.விக்னேஸ்வரன், மாகாண கல்வி பணிப்பாளர் எஸ்.செல்வராஜா, மற்றும் இராணுவ அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X