2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

பௌத்தத்தை பரப்புவதற்காக யாழில் தமிழ் பௌத்த அறநெறிப் பாடசாலை ஆரம்பிக்கப்படவில்லை: விமல தேரர்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 28 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத், சுமித்தி)


யுத்தத்தின் அதிர்வுகளில் இருந்து தமிழர்கள் விடுபடுவதற்கும் யுத்த பாதிப்புகளில் இருந்து மக்களை நல்வழிப்படுத்தவுமே தமிழ் பௌத்த அறநெறிப் பாடசாலை யாழ் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டதே தவிர பௌத்த மதத்தை பரப்புவதற்காக அல்ல. பௌத்த மதத்தில் உள்ள தர்ம சிந்தனைகளை அங்குள்ள மாணவர்களும் அறிந்து கொள்வதற்கே இந்த பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது என்று யாழ் நாகவிகாரையின் பீடாதிபதி விமல தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை நாகவிகாரைக்கு முன்னாள் உள்ள விருந்தினர் விடுதியில் தமிழ் பௌத்த அறநெறிப்பாடசாலையின் செயற்பாடுகள் தொடர்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை அவர் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் 1958ஆம் ஆண்டு தமிழ் பௌத்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. நாட்டில் நடைபெற்று வந்த அசாதரண சூழ்நிலையால் அதனை தொடர்ந்த முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

யுத்தம் நடைபெற்ற காலத்திற்கு முன்னர் தமிழ் மக்களுக்கும் நாகவிகாரைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது நாகாவிகாரையை பாதுகாப்பதில் தமிழ் மக்கள் முன்னின்று செயற்பட்டுள்ளார்கள் என்றார்.

தற்போது நாட்டில் அமைதியான சூழல் ஏற்பட்டுள்ளதையடுத்து பௌத்த சிந்தனைகளையும் அறிநெறிகளையும் இங்குள்ள மாணவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கத்தில் தமிழ் பௌத்த சங்கத்தினால் அறநெறிப்பாடசாலை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் சில அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் தவறான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். யுத்தத்தின் அதிர்வுகளில் இருந்து தமிழர்கள் விடுபடுவதற்கும் யுத்த பாதிப்புகளில் இருந்து மக்களை நல்வழிப்டுத்தவுமே தமிழ் பௌத்த அறநெறிப்பாடசாலை. இது யாரையும் மதம் மாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்ல என்றார்.

அத்துடன் அந்த அறநெறிப் பாடசாலையில் 52பேர் கல்வி கற்று வருகின்றனர். இதற்கான அன்பளிப்புக்களை பல்வேறு தரப்பினர் வழங்கி வருகின்றனர். அரசாங்கத்தின் நிதியில் இந்த பாடசாலை இயங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் தமிழ் பௌத்தசங்கத்தின் தலைவர் ரவிகுமார், அதன் செயலாளர் கிருசானந் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X