2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தை கைது

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 01 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் தந்தை ஒருவரை கைதுசெய்துள்ளதாக யாழ். பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

12 வயதுடைய தனது மகளை அவரது 50 வயதான தந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். இது தொடர்பில்  இந்தச் சிறுமி யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினார்.
 
யாழ். நல்லூர் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  இதனைத் தொடர்ந்து சந்தேக நபர் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X