2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

ஜனாதிபதியின் யாழ். விஜயம் ரத்து

Menaka Mookandi   / 2013 ஜனவரி 08 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-த.சுமித்தி

தேசிய பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிரதி அரசாங்க அதிபர் ரூபினி தெரிவித்துள்ளார்.

பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தினை மேற்கொள்ளவிருந்த ஜனாதிபதி, மழை காரணமாக தனது விஜயத்தை ரத்து செய்துள்ளார் என்று பிரதி அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் இந்த விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஜனாதிபதி செயலகமும் உறுதி செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருந்த ஜனாதிபதி, யாழ். வைத்தியசாலையில் புதிதான நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடமொன்றை திறந்துவைக்கவிருந்தார் என்பதும் கோப்பாயிலுள்ள தேசிய கல்வியற் கல்லூரி விழாவொன்றிலும் பங்கேற்கவிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X