2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

நியமனம் பெறாத பட்டதாரிகளின் விபரங்களை அனுப்புமாறு மாகாண கல்வி அமைச்சுக்கு அறிவிப்பு

Super User   / 2013 ஜனவரி 08 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பட்டதாரி பயிலுனர் சேவையில் கடந்த வருடம் உள்வாங்கப்படாத பட்டதாரிகள் தமது விபரங்களை வட மாகாண கல்வி அமைச்சுக்கு அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பட்டம்பெற்று பட்டதாரி பயிலுனர் சேவையில் உள்வாங்கப்படாதவர்களை 18ஆம் திகதிக்கு முன்னர் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டள்ளனர்.

பட்டதாரி பயிலுனர் நியமனம் வழங்கப்பட்டபோது அவற்றில் நியமனம் பெறாதோர் மற்றும் நியமனம் பெறத் தவறியோர் பலரும் தமது நிலைகுறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். 

இந்நிலையில் மேற்படி பாடநெறிகளை கற்பிப்பதில் வெற்றிடங்கள் நிலவுவது தொடர்பான விடயங்கள் அமைச்சரவர்களுக்கு தெரியப்படுத்தப்படுத்தப்பட்து.

இதனையடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்வி அமைச்சர், வட மாகாண ஆளுநர் உள்ளிட்டோருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளை அடுத்தே நியமனம் பெறத் தவறிய பட்டதாரிகளின் விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஏனைய திணைக்களங்களில் முகாமைத்துவ உதவியாளர்களாகவும் திட்ட அலுவலர்களாகவும் தற்சமயம் கடமையாற்றுவோர் ஆசிரிய சேவையில் தம்மை இணைத்துக்கொள்ள விரும்பினால் தமது விபரங்களை உள்ளடக்கிய விண்ணப்பங்களை 18  திகதிக்கு முன்னதாக வட மாகாண கல்வி அமைச்சிற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X