2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த கோரிக்கை

Kogilavani   / 2013 ஜனவரி 11 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துமாறு கோரிக்கை ஒன்றினை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் போக்குவரத்து சபை உபதலைவர் வி. விமலரட்ணவிடம் முன்வைத்துள்தாக போக்குவரத்து சபை முகாமையாளர் அஸ்ஹர் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபையின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு யாழ். கோண்டாவில் டிப்போவில் நேற்று நடைபெற்றது.

இதன்போதே  யாழ், காரைநகர், முல்லைத்தீவு, பருத்தித்துறை, கிளிநொச்சி, மன்னார் வவுனியா மாவட்ட பேருந்து சங்க ஊழியர்கள் இக்கோரிக்;கையினை முன்வைத்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபை உபதலைவர் வி. விமலரட்ணவுடன் கலந்துரையாடிய அவர்கள்,

'தற்போதுள்ள ஒரு பேருந்தின் வருமானம் போதாமல் உள்ளது. மேலதிகமாக பேருந்துகளை வழங்கினால் அவற்றின் மூலம் வருமானத்தினை அதிகரிக்கச் செய்யும் வாய்ப்பு இருக்கின்றன' என்று தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தாம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், தமது குறைபாடுகள் குறித்தும் தலைவரிடம் எடுத்துரைத்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X