2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

சிறிதரன் எம்.பி.யின் அலுவலகத்தை மூடுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 ஜனவரி 16 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹேமந்த்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்தை மூடிவிடுமாறு கோரி இன்று புதன்கிழமை கிளிநொச்சி நகரில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கிளிநொச்சி நகரில் உள்ள காக்காகடை சந்தியில் இருந்து மாவட்ட செயலகம் வரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறிதரன் எம்.பிக்கு எதிராக கிளிநொச்சி நகரிலும் அதை அண்மித்த பகுதிகளும் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்தன.

இதேவேளை, சிறிதரன் எம்.பி.யின் கிளிநொச்சி அலுவலகம் கடந்த சனிக்கிழமை சோதனையிடப்பட்டு பல பொருட்கள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X