2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஆசிய பசுபிக் சிறுவர் மாநாட்டில் பங்கேற்க யாழ். இந்து மாணவன் தெரிவு

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 22 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் பிராந்தியங்களின் 25ஆவது சிறுவர் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆரம்ப பாடசாலை மாணவன் பாலேந்திரன் அபிராம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த மாநாட்டுக்கு செல்வதற்காக கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த மாணவன் கடந்த வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் இலங்கையில் தமிழ் மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றி 193 புள்ளிகளைப் பெற்று முதன்மை மாணவனாக தெரிவு செய்யப்பட்டார்.

ஜூலை மாதம் 25ஆம் திகதி ஜப்பானில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு இலங்கையில் இருந்து 6 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X