2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அங்கவீனமான முன்னாள் போராளிகளுக்கு வீட்டுக் கடனுதவி

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 25 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

முன்னாள் போராளிகளில் அங்கவீனர்களுக்கு வீட்டு கடனுதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக புனர்வாழ்வு வேலைத்திட்ட யாழ். மாவட்ட காரியாலய அதிகாரி ஜகத் குமார இன்று தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் சரணடைந்த முன்னாள் போராளிகளில் சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்களில் அங்கவினர்களுக்கு வீட்டுக்கடனுதவி வழங்குவதற்கான நடவடிக்கைகள் புனர்வாழ்வு அமைச்சின் ஊடாக புனர்வாழ்வு அமைச்சின் ஆணையாளர் நாயகம் மற்றும் புனர்வாழ்வ மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக அவர் கூறினார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள புனர்வாழ்வு வேலைத்திட்ட அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்களை பெற்று விண்ணப்பிக்க முடியுமென்றும், அவ்விண்ணப்ப படிவத்தினை சமூக சேவைகள் அமைச்சின் மூலம் பிரதேச செயலாளரின் உறுதிப்படுத்தலில் விண்ணப்பங்கள் நிரப்பபட்டு புனர்வாழ்வு அமைச்சிற்கு அனுப்பும் பட்சத்தில் இரண்டரை இலட்சம் ரூபா, வீடு நிர்மாணிப்பதற்கும், வீட்டு திருத்த பணிகளுக்கான 1 1/2 லட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X