2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் கடமையாற்றுகின்றோம்: கிராம அலுவலர்கள்

Menaka Mookandi   / 2013 மார்ச் 14 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

'உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையிலேயே நாங்கள் கடமையாற்றி வருகின்றோம்' என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்கவிடம் கிராம அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

நல்லூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற முரண்பாடுகளைத் தீர்த்தல் என்னும் தொனிப்பொருளில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இதனை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

'யாழ் அரியாலைப் பகுதியில் சட்டவிரோதமான மணல் அகழ்வைத் தடுக்க முயற்சித்த கிராம அலுவலர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டுள்ளார்.

ஒரு அரசை சொத்ததை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையிலேயே குறித்த கிராம அலுவலர் தாக்கப்பட்டுள்ளரே தவிர வேறு காரணங்கள் எதுவும் இல்லை. இனிவரும் காலங்களில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறாத வகையில் அரச உத்தியோகஸ்தர்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும்' என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாது என்றும் இந்த கிராம அலுவலர் மீதான தாக்குதல் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X