2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

வடக்கில் காணி பிரச்சினைகளை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும்: ரஜீவ விஜேசிங்க

Menaka Mookandi   / 2013 மார்ச் 14 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


'வடக்கில் காணி சம்பந்தமான பிரச்சினை இங்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. இந்த காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்' என்று நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை நல்லூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற முரண்பாடுகளை தீர்த்தல் என்னும் தொனிப்பொருளில் நடைபெற்ற பொதுமக்களுடனான சந்திப்பின்போதே இதனை அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள காணி தொடர்பான பிரச்சனையை நான் நன்கு அறிவென் அதனைத் தீர்ப்பற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது இதன் வரையறையை கூற முடியாது.

பொது மக்களிடம் காணப்படுகின்ற காணி தொடர்பான பிரச்சினைளுக்கு காணி தொடர்பான மக்கள் சபை ஒன்றை நிறுவி பட்டதாரி பயிலுனர்கள் அந்தப் பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து பிரதேச செயலகத்திற்கு அறிக்கையிடுவதன் மூலம் அவற்றைத் தீர்த்து வைக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

அத்துடன் பிரதேச சபைகள் தங்கள் பகுதிக்குட்பட்ட வீதிகளை புனரமைக்கும் போது அதன் மூலப்பொருட்களை தாங்களே கொள்வனவு செய்து திருத்த வேலைகளுக்கான கூலிகளாக இராணுவத்தினரையும் பொலிஸாரையும் பொதுமக்களையும் பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்தும் போது கூலிக்குரிய செலவீனம் குறையும் போது நீண்ட தூரமான வீதியை புனரமைக்க முடியும் என்று கேட்டுக்கொண்டார்.

அரச செயலகங்களில் சிறுவர் விடயங்களைக் கையளும் உத்தியோகஸ்தர்கள் சிறுவர்கள் பெண்கள் தொடர்பான விடயங்களில் கூடிய கவனம் செலுத்துவதோடு மக்கள் மத்தியில் இறங்கி செயலாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பாடசாலைகளில் மாணவர்களுக்கு கல்வியை மட்டும் கொடுக்காமல் ஏனைய கலை கலாச்சார செயற்பாடுகளிலும் மாணவர்களை ஈடுபடுத்தவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

  Comments - 0

  • aj Thursday, 14 March 2013 01:22 PM

    என்னமோ தெரியல, ஜெனிவா வந்தாலே இப்படி அறிக்கை, குழு, உறுதிமொழி என்று வழமைபோல அரசு பொய் பூச்சாண்டி வேலையை காட்ட ஆரம்பித்துவிடும். இவர் ராஜ்வி விரங்கசிங்க இருப்பதிலே மிக சிறந்த நடிகர் என்றால் அது மிகையாகாது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X