2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

யாழில் காசோலை மோசடிகள் தொடர்கின்றன: பொலிஸ்

Menaka Mookandi   / 2013 மார்ச் 15 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சொரூபன்

யாழ். மாவட்டத்தில் பாரிய காசோலை மோசடிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரட்ன தெரிவித்துள்ளார். இன்று யாழ். பொலிஸ் நிலையத்தின் இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த 11ஆம் திகதி வல்வெட்டிதுறை பகுதியில் 33 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா காசோலை மோசடி செய்யப்பட்டது தொடர்பான முறைப்பாடு ஒன்று வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.  என்றும் அதனுடன் தொடர்புடைய சந்தேக நபரான வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடி பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது போன்று கடந்த வருடம் ஆவணி, புரட்டாதி மாத காலப்பகுதியில் வியாபார நோக்கத்திற்காக 46 இலட்சம் ரூபா காசோலை மோசடி செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை ஆதி கோவிலடி பகுதியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியில் 25 ஆயிரம் ரூபா காசோலை மோசடி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் இவ்வாறான இன்னும் பல காசோலை மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்ற வண்ணம் உள்ளதாகவும் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X