2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

திருடப்பட்ட சிலைகள் மீட்பு

Super User   / 2013 மார்ச் 25 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-என்.நவரத்தினராசா


தாவடி அம்பலவாணர் முருகமூர்த்தி ஆலயத்தில் காணாமல் போன சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினாலேயே இது மீட்க்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் திருடப்பட்ட பல இலட்சக்கணக்கான ரூபாய் பெறுமதியான ஜம்பொன் சிலைகளே மீடகப்பட்டுள்ளன. இதன்போது, திருட்டு சம்பவத்;துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் மல்லாகம் நீதிமன்றத்தில் பொலிஸாரினால் ஆஜர்படுத்தவுள்ளனர். திருடப்பட்ட முருகன் வள்ளி தெய்வயானைச் சிலைகள் நூற்றாண்டு பழமை வாய்ந்த சிலைகள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 

இந்த சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் ஏப்ரல் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி மல்லாகம் நீதவான் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X