2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதானவர்கள் இருவர் விடுதலை

Super User   / 2013 மார்ச் 25 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட இருவர் யாழ். மேல் நீதிமன்றினால் இன்று திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

1993 மற்றும் 2007ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகளிடத்தில் இருந்து ஆயுத பயிற்சி மற்றும் தற்கொலை குண்டு தாக்குதல் ஈடுபட்டதாக கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த இருவரும் பயங்கர வாத புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யபட்டு, கொழும்பு பிரதான நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிரான வழக்கு கடந்த 2012ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தினால்  யாழ். மேல் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இருவர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நியாயமற்ற முறையில் நிருபிக்கப்படாததினால் இருவரையும் யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே. விஸ்வநாதன் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X