2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

த.தே.கூ.பினர் மீதான தாக்குதலுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்

Menaka Mookandi   / 2013 மார்ச் 30 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


கிளிநொச்சியில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீதான தாக்குதலை தாம் வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் அக்கட்சியின் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றுள்ள ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'இன்று சர்வதேச நாடுகள்  இலங்கைக்கு எதிராக இரண்டு தீர்மானங்கள் கொண்டு வந்து மனித உரிமைப்பேரவையில் நிறைவேற்றியுள்ளன. இந்த தீர்மானங்கள் தொடர்பில் நாங்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளளோம் இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எவ்விதமான விமோசனமும் இல்லை என்பதை சுட்டிக்காட்டியிருங்தோம்.

இந்த நிலையில் சர்வதேசத்தினால் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்திற்குப் பின்னர் இலங்கை சர்வதேசத்தின் கண்காணிப்பில் இருக்கும் நிலையில் இவ்வாறான தொரு தாக்குதல் நடைபெற்றிருப்பது கண்டிக்கத்தக்கவிடயம்' என்று அவர் குறிப்பிட்டார்.

'கூட்டமைப்பினர் மீதான தாக்குதலை தனிச்சம்பவமாக பார்க்க முடியாது. தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மட்டுமன்றி இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகங்களும் தாக்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த தாக்குதல் சம்பவங்களுக்கான பின்னணியைப் பார்க்க வேண்டும்.

வடக்கில் வாழும் தமிழ் மக்கள் போரினால் பாதிக்கப்பட்டதை விட இப்போது  மிகமோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றார்கள் என்பதை மனித உரிமையை மதிக்கும் அமைப்புக்கள் அறிந்திருக்கும் சந்தாப்பத்தில் இவ்வாறான சம்பவங்கள் இங்கு நடைபெற்று வருகிறன.  இந்தச் சம்பவங்களை கண்டிப்பதால் எவ்விதமான நன்மையும் இல்லை என்றாலும் இவ்வாறான அநியாங்களைத் தடுக்க வலியுறுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .