2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

விமல் தலைமையில் யாழ். சமூர்த்தி உத்தியோகஸ்தர்கள் சங்க ஒன்றுகூடல்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 02 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


யாழ் மாவட்ட சமூர்த்தி யோகஸ்தர்கள் சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல் இன்று செவ்வாய்கிழமை நல்லூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

இன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவனந்தா மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது யாழ் மாவட்டத்தில் பொது மக்களுக்கு சிறந்த சேவையாற்றிய சமூர்த்தி உத்தியோகஸ்தர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவனந்தா மற்றும் வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச, அகில இலங்கை சமூர்த்தி  உத்தியோகஸ்தர்கள் சங்கத்தலைவர் ஜெகத் குமார, யாழ் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பிரதேச செயலாளர்கள் சமூர்த்தி உத்தியோகஸ்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X