2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

தொழிற்பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஏப்ரல் 19 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்


தொழிற் பயிற்சி அதிகார சபையில் தொழிற்பயிற்சி முடித்த 63 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஈழுமக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரின் அலென்ரின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.

யாழ். மாவட்டத்தில் உள்ள 8 தொழிற்பயிற்சி நிலையங்களில், கணினி வன்பொருள் திருத்துனர், இலத்திரனியல் திருத்துனர், மோட்டார் சைக்கிள் திருத்துனர், தையல் பயிற்சிநெறி, அலுமினியம் பொருத்துதல், அழகு கலை, குளிர்சாதனப் வகைகள் திருத்துனர், போன்ற பயிற்சி நெறிகளை முடித்த மாணவர்களுக்கே இச்சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், சாவகச்சேரி பிரதேச செயலர் எஸ்.சத்தியசீலன், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் எம்.கைலாஜினி, மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபை உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X