2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பாலுக்கான கொடுப்பனவை வழங்காமையால் சத்துணவுத் திட்டம் நிறுத்தப்படும் நிலை

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 24 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

சத்துணவு வழங்கும் திட்டத்தின் கீழ், பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த பசுப் பாலுக்கான கொடுப்பனவுகள் இதுவரையில் பாடசாலைகளுக்கு வழங்கப்படாத நிலையில் சத்துணவுத் திட்டம் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ். மாவட்டத்தின் வலிகாமம் வலயத்திற்கு உட்பட்ட பல பாடசாலைகளில் கடந்த வருடம் 3ஆம் தவணையின்போது,  மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பசுப் பாலுக்கான கொடுப்பனவுகள் வலயக் கல்விப் பணிமனைகளினால்  வழங்கப்படவில்லை எனவும் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் காரணமாக,  தொடர்ந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பாடசாலை அதிபர்கள் பல நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் அதிபர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பில் வடமாகாண கல்விப் பணிப்பாளர் வை.செல்வராசாவிடம் கேட்டபோது, இந்தக் கொடுப்பனவு தொடர்பான அறிக்கை வடக்கு மாகாண கல்வி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  இந்த அறிக்கை கிடைத்தவுடன் மாணவர்களுக்கு பசுப் பாலுக்கான கொடுப்பனவுகளை  வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X