2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

சொந்த மண்ணில் வாழ விடுங்கள் இல்லையேல் கொன்றுவிடுங்கள்: வலி வடக்கு மக்கள்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 29 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா


'எமது நிலத்திற்கு எங்களைப் போகவிடுங்கள் அல்லது நச்சு தந்து எங்களை கொன்றுவிடுங்கள்' வலிகாமம் வடக்கு மக்கள் தெரிவித்தனர். இன்று திங்கட்கிழமை தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தின் போமே அம்மக்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
 
'1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றோம். எங்கள் நிலம் எங்களுக்கே கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த எமது நிலங்களை இராணுவம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது என்ற செய்தி பேரிடியாக உள்ளது' என்றும் அம்மக்கள் குறிப்பிட்டனர்.

இதற்கு பதிலாக எமக்கு நஸ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதற்கு நாங்கள் ஒரு போதும் சம்மதிக்கமாட்டோம். எனவே இனியும் நாங்கள் எங்கள் நிலங்களை விட்டுக்கொடுத்து ஏதிலிகளாக வாழமுடியாது. எங்கள் நிலங்களுக்கு எங்களை போகவிடுங்கள்' என்று மண்ணை வாரித்தூவி இம்மக்கள் கோரிக்கை விடுத்துனர்.

  Comments - 0

  • vallarasu Monday, 29 April 2013 04:31 PM

    பாவம் ஐயா... இது என்ன அநியாயம். இப்படி ஓர் அநியாயம் எந்த‌ நாட்டிலும் நடக்கவில்லை. பாவம் ஐயா...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X