2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

காங்கேசன்துறை புனரமைப்புச் செயற்றிட்டம் கையளிப்பு

Super User   / 2013 மே 07 , மு.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா, கு.சுரேன்


காங்கேசன்துறை துறைமுகம் புனரமைப்பு செயற்பாடு பூரணப்படுத்தப்பட்டு கையளிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இலங்கை துறைமுக அதிகாரசபை முகாமைத்துவப் பணிப்பாளர் நிஹால் ஹெப்பிட்டிப்பொல, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தாவிடம் நிறைவேற்றப்பட்ட செயற்திட்ட அறிக்கையினைச் சம்பிரதாயபூர்வமாக கையளித்து வைத்தார்.

காங்கேசன்துறை துறைமுகத்தில் இன்று காலை 10 மணிக்கு இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் வே.மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் காங்கேசன்துறை துறைமுக புனரமைப்புச் செயற்பாடுகள் 25 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் நடைபெற்று தற்போது முடிவடைந்துள்ளது.

மேலதிக துறைமுக வேலைகளைத் திட்டங்களைச் செய்வதற்காக இந்திய அரசாங்கம் 45 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலகு கடனடிப்படையில் வழங்கவுள்ளதாக இலங்கைக்கான இந்தியத்தூதுவர் அசோக் கே காந்தா கூறினார்.

இந்நிகழ்வில் வடமாகாண பிரதி பிராந்திய தளபதி சந்தன விமலதுங்க, கேணல் உபுல் அபயரத்தன, தளபதி புத்திக லியகமஹே உட்பட கடற்படை அதிகாரிகள்  பலர் கலந்துகொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X