2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

தாதிய மாணவர்கள் இரத்ததானம்

Suganthini Ratnam   / 2013 மே 10 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு தாதிய மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை இரத்ததானம் செய்தனர்.

தாதிய பயிற்சி கல்லூரி அதிபர் வல்லிபுரம் தலைமையில் நடைபெற்ற இந்த இரத்ததான நிகழ்வில், யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியினருக்கு சுமார் 70 க்கும்  மேற்பட்டவர்கள் இரத்ததானம் செய்தனர்.

இந்த இரத்ததான நிகழ்வில் தாதிய உத்தியோகத்தர் சங்க தலைவர் என்.நற்குணராஜா மற்றும் தாதிய போதனாசிரியர்கள், தாதிய மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, எதிர்வரும் 16ஆம் திகதி சர்வதேச தாதியர் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X