2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

போக்குவரத்து விதிமுறைகள் மீறப்படுவதே விபத்துக்கள் அதிகரிப்பதற்கு காரணம்: பொலிஸ்

Menaka Mookandi   / 2013 மே 10 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ் மாவட்டத்தில் பொது மக்கள் அதிகளவில் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாத நிலமையே யாழ் மாவட்டத்தில் இடம்பெறும்  வீதி விபத்துக்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றது.

இத்தகைய நிலைமையில் இருந்து பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் போக்குவரத்து சம்பந்தமான ஆவணப்படங்களை பாடசாலைகள் சனசமூக நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் காண்பிப்பதுடன் கொழும்பில் இருந்து வரவழைக்கப்படும் போக்குவரத்துப் பொலிஸாரின் விசேட அனுபவங்களுடன் பொது மக்களுக்கு வழிப்பணர்வுக் கருத்தரங்குகளையும் நடத்த யாழ் பொலிஸாரால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனால் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வீதி விபததுக்களை கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காங்கேசந்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.மஹிந்த ஏக்கநாயக்கா தெரிவித்துள்ளார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X