2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

யாழ். பல்கலையில் பலத்த பாதுகாப்பு

Kanagaraj   / 2013 மே 18 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸாரே இவ்வாறு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடத்தக்கூடும் என்ற சந்தேகத்திலேயே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதேவேளை யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றுக் காலை 10.30 மணிமுதல் 11.30 மணிவரையில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இவ்வஞ்சலி நிகழ்வில், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தீபமேற்றி உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

எனினும், இவ்வஞ்சலி நிகழ்வில், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் போராசிரியர்கள் பலர் சமூகமளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X