2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

யாழிலுள்ள படை முகாம்களின் தொகை குறைக்கப்படும்: இராணுவ தளபதி

Menaka Mookandi   / 2013 மே 22 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்திலுள்ள இராணுவ முகாம்களின் எண்ணிக்கையை இராணுவம் குறைக்கவுள்ளதெனவும் காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கு கொடுக்கவுள்ளதாகவும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

'தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள 17 இராணுவ முகாம்களை மூன்றாக குறைக்கப்போகின்றோம்.' எனவும் இராணுவ தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

'யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலுமிருந்து அகற்றப்படும் பதினான்கு முகாம்களும் பலாலி இராணுவ குடியிருப்பில் உள்வாங்கப்படும்' என்றும் அவர் கூறியுள்ளார்.

'முகாம்கள் இருந்த காணிகள் உரிமையாளர்களிடம் திருப்பி கொடுக்கப்படும். தேசிய பாதுகாப்பு என்பதை கருத்தில் கொண்டு திருப்பிக் கொடுக்க முடியாத காணிகளுக்கு நட்டஈடு வழங்கப்படும்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் முடிந்த பின்னரும் பெரிய அளவில் இராணுவம் இருப்பது இப்பகுதிகளில் பொதுமக்கள் வாழ்வுக்கு இடைஞ்சலாக உள்ளது என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுக்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X