2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சு.க. வேட்பாளர் தெரிவில் தயாமாஸ்டர் நிராகரிப்பு?

Kanagaraj   / 2013 ஜூலை 27 , பி.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்,சுமித்தி தங்கராசா

வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் விடுதலைப்புலிகளின் ஊடகப்பேச்சாளராகச் செயற்பட்ட தயாமாஸ்டர்  இடம்பெறவில்லை என்று சுதந்திரக்கட்யின் யாழ் மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

அண்மையில் சுதந்திரக்கட்சியில் இணைந்துகொண்ட தயாமாஸ்டர் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தனது விருப்பத்தை தெரிவித்திருந்ததோடு வேட்பாளர் தெரிவு தொடர்பில் சுதந்திரக்கட்சியினால் நடாத்தப்பட்ட நேர்முகத் தேர்விலும் கலந்து கொண்டார்.

யாழ். சுதந்தரக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் நேற்று சனிக்கிழமை சுதந்திரக்கட்சினால் வெளியிடப்பட்டுள்ளது இதில தயாமாஸ்டரின் பெயர் இடம்பெறவில்லை.

இந்த தேர்தலில்  போட்டியிடுவோரின் விபரங்கள்  வெளியிடப்பட்டுள்ளதாகவும் இதில் தயாமாஸ்ரரின் பெயர்  இடம்பெறவில்லை என்றும் யாழில் போட்டியிடும் எழுபேர் இன்று கையொப்பம் இடுவதற்கு அழைக்கப்பட்டுள்ளதாக சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட அலுவலகம் நேற்று தெரிவித்து.

அத்துடன், யாழ் மாவட்டத்தில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வடமாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வந்த எம்.எம் சீராஸின் பெயரும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • AMBI. Monday, 29 July 2013 08:10 AM

    ஐயோ ஐயோ... அநியாயம்... அநியாயம்... ந‌ம்பிக்கைக்கு துரோகம் பண்ணிபுட்டாங்க இல்ல. இனி நீங்களும் ஒரு கட்சியை ஆரம்பிக்கலாம்லே...

    Reply : 0       0

    barani Wednesday, 31 July 2013 05:02 AM

    சரவெடி சவுக்கடி...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X