2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

பெண்களின் புகைப்படம் தாங்கிய சுவரொட்டிகளை நீக்குமாறு கோரிக்கை

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 16 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை நீக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கடந்த உற்சவங்களின்போது திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பெண்களின் புகைப்படங்களை தாக்கிய சுவரெட்டிகள் நல்லூர் வளாகத்தில் யாழ்.பொலிஸாரினால் ஒட்டப்பட்டுள்ளன.

இவ்வாறான சுவரொட்டிகள் பெண்களின் தனி மனித உரிமை மீறல் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவர் நேற்று வியாழக்கிழமை யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ணாவை சந்தித்து சுவரொட்டிகளை நீக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த வேண்டுகோளுக்கு அமைய யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுவரொட்டிகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X