2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அனந்தி-நவீபிள்ளை சந்திப்பு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 27 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி எழிலனின் மனைவியும் வடமாகாண சபை வேட்பாளருமான அனந்தி சசிகரன் சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலுக்கு அருகாமையிலுள்ள யு.என்.சி.எச்.ஆர் காரியாலயத்தில் வைத்தே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.அனந்தியுடன் நவீப்பிள்ளை ஒரு நிமிடம் மட்டுமே கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாண பிரஜைகள் குழுவுடன் சென்றே அனந்தி நவநீதம்பிள்ளையை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த காரியாலயத்தில் வைத்து பல்வேறு சிவில் சமூக பிரதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதன் காணாமல் போன தங்களுடைய உறவுகளை தேடிதருமாறு தாயொருவர் கண்ணீருடன் மன்றாடியுள்ளார்.

அவரை கட்டியணைத்த நவீபிள்ளை உங்களுடைய நிலைமைகளை நானறிவேன் என்று தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0

  • AJ Tuesday, 27 August 2013 09:20 AM

    எத்தனை நிமிடம் பேசினோம் என்பது முக்கியம் அல்ல. விடயம் சரியாக சொல்லப்பட்டதா, செவிமடுக்கப்பட்டதா என்பது தான் முக்கியம். அந்தவகையில் ஆனந்தி அக்காவுக்கு வாழ்த்துக்கள். தன்னுடைய குரலை சரியாக சொல்லி இருக்கிறார்.

    Reply : 0       0

    jkumar Tuesday, 27 August 2013 05:30 PM

    போர்க்குற்றம் செய்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி எழிலனின் மனைவி அனந்தி சசிகரன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்த முன் தமிழ் மக்களிடம் எழிலனின் மனைவி அனந்தி சசிகரன் கணவனும் புலிகளும் செய்த தவறுகளுக்கு மன்னிப்புக் கோர வேண்டும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X