2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கணேகம நியமனம்

Super User   / 2013 ஒக்டோபர் 07 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக டப்ளியூ.ஏ.டி.பி.கணேகம நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ். தலைமை பொலிஸ்  நிலைய பொலிஸார் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய இந்து கருணாரட்ணவுக்கு இன்று திங்கட்கிழமை முதல் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.ஏ.டி.பி.கணேகம நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய இந்து கருணாரட்ண நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனங்கள் பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .