2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வடமாகாண சபையின் அமைச்சர்கள் விபரம் வெளியீடு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 10 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

வடமாகாண சபைக்கான அமைச்சரவை தொடர்பான விபரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது

நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டத்தில் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

நீண்டநாட்களாக இழுபறியிலிருந்த மேற்படி அமைச்சரவைத் தெரிவு, தற்போது இறுதியான தீர்மானத்திற்கு வந்துள்ளது.

இந்த நிலையில், கல்வி அமைச்சர்  -  தம்பிராஜா குருகுலராஜா

சுகாதார அமைச்சர் - பத்மநாதன் சத்தியலிங்கம்

விவசாய அமைச்சர் -  பொன்னுத்துரை ஐங்கரநேசன்

உள்ளூராட்சி அமைச்சர் -  பாலசுப்பிரமணியம் டேனிஸ்வரன்

அவைத் தலைவர் -  கந்தையா சிவஞானம்,

பிரதி அவைத் தலைவர் -  அன்ரனி ஜெகநாதன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சித் தலைவர்கள் எவரும் கலந்துகொள்ளாத நிலையில் வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .