2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

யாழில் பெரும்போக நெற்செய்கைக்காக விவசாயிகள் தயார்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 11 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

யாழ். மாவட்டத்தில் தற்போது மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகள் நெல் விதைப்புக்கான  மண்ணை பதனிடும் செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

கமத்தொழில் திணைக்களத்தினால் நெற்செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு வழமை போன்று மானிய உரம் விநியோகிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் ஒரு பரப்புக் காணிக்கு, ஏக்கர் வரியாக ரூபா 1.50 சதமும், மானியமாக பெறப்படும் ஒரு கிலோ உரத்தின் விலைக்கு மேலதிகமாக ரூபா 3 காப்புறுதிக் கட்டணமாகவும் கமத்தொழில் திணைக்களத்திற்கு செலுத்துகின்றனர்.

இது தொடர்பாக கமத்தொழில் திணைக்களத்தின் பெரும்போக நெற்செய்கையுடன் தொடர்புபட்ட அதிகாரி ஒருவரைக் கேட்டபோது,

இது எதிர்காலத்தில் இயற்கையினால் ஏற்படக்கூடிய அழிவுகளில் விவசாயிகளுக்கு ஏற்படும் நட்டத்திலிருந்து அவர்களை பாதுகாக்கும் நோக்குடன் பெறப்படும் காப்புறுதிப் பணமாகும் என அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .