2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

புளொட் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

Super User   / 2013 ஒக்டோபர் 14 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் புளொட் அமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் இன்று திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

புளொட் அமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் , தாமோதரம்பிள்ளை லிங்கநாதன் ஆகியோர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

யாழ். வட்டுக்கோட்டை பிரதேசத்தில் புளொட் அமைப்பின் செயலாளர் சுப்பிரமணியம் சதானந்தம் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்  செய்துகொண்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை யாழில் நடைபெற்றது. இந்த நிகழ்வினை புளொட் உறுப்பினர்கள் இருவர் உட்பட ஒன்பது வட மாகாண சபை உறுப்பினர் புறக்கணித்திருந்தனர்

இந்த நிலையிலேயே புளொட் அமைப்பின் இரண்டு உறுப்பினர்கள் இன்று சத்தியபிரமாணம் செய்துகொண்டனர். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் டெலோ சார்பாக வட மாகாண சபைக்கு தெரிவுசெய்யப்பட்ட எம்.கே.சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .