2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

யாழில் ஐந்து நூலகங்கள் விருதுக்காக தெரிவு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.தபேந்திரன்

தேசிய நூலக  ஆவணமாக்கல்  சபையின்  விருதிற்காக யாழ். சாவகச்சேரி  பிரதேச  சபையின்  5 நூலகங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

கைதடி, சரசாலை, நாவற்குழி, வரணி, மிருசுவில்  ஆகிய பிரதேங்களில்  அமைந்துள்ள  நூலகங்களே இவ்வாறு விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

மேற்படி நூலகங்கள் மிகச்சிறந்த நூலக சேவையினை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டு கொழும்பிலுள்ள தேசிய நூலக ஆவணமாக்கல் சபையினால் இவ்விருது வழங்கப்படவுள்ளது.

தேசிய நூலக ஆவணமாக்கல் சபையின் தலைமை அலுவலகத்தில் எதிர்வரும் 29 ஆம் திகதி  நடைபெறவுள்ள விருது வழங்கும் நிகழ்வில் வைத்து மேற்படி நூலகங்களுக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .