2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மின்சாரக் கட்டணம் செலுத்துவதில் இழுபறி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

ஏ- 9 வீதியின் கரடிப்போக்குச் சந்தியிலிருந்து நீதிமன்றம் வரையில் பொருத்தப்பட்ட மின்விளக்குகளுக்கான மின்சாரக் கட்டணங்களை செலுத்துவதில் இழுபறிநிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கான மின்சாரக் கட்டணம் ரூபா 10 இலட்சம் வரை செலுத்தப்படவில்லை என்றுகூறி இலங்கை மின்சார சபையினால் மின்விளக்குகளுக்கான மின்சாரம் கடந்த வியாழக்கிழமை (3) துண்டிக்கப்பட்டது.

இதுதொடர்பாக கரைச்சி பிரதேச சபைச் செயலாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால்; கரடிப்போக்குச் சந்தியிலிருந்து நீதிமன்றம் வரையிலும் 144 மின்விளக்குகள் ரூபா 3.4 மில்லியன் செலவில் ஜுன் மாதம் 6ஆம் திகதி பொருத்தப்பட்டது.

இதற்கான மாதாந்த மின்கட்டணமாக ரூபா 4.5 இலட்சத்தினை கரைச்சி பிரதேச சபையினால் செலுத்த முடியுமா என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கடிதம் மூலம் எங்களிடம் கேட்டிருந்தார்.

எமது பிரதேச சபைக் கூட்டத்தில் இந்த மின்விளக்குக்கான மின்சாரக்கட்டணத்தில் பிரதேச சபையினால் மாதாந்தம் ரூபா 1 இலட்சம் ரூபா செலுத்த முடியும் என தீர்மானமெடுத்து அரசாங்க அதிபருக்கு பதில் கடிதம் அனுப்பியிருந்தோம்.

இருந்தும் அதற்கான பதில் வரவில்லை.

மின்சார சபைக்கான மின்கட்டணமாக ரூபா 10 இலட்சத்திற்கும் அதிகமான தொகை செலுத்தப்படாமல் இருந்தது.

இந்நிலையில் இலங்கை மின்சாரசபை கடந்த 3ஆம் திகதி வியாழக்கிழமை இந்த மின்விளக்குகளுக்கான மின் இணைப்பினை துண்டித்தனர்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .