2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

யாழில் சிங்கள மக்களுக்கு நிரந்தர காணி வழங்கப்படவுள்ளது

Kogilavani   / 2013 ஒக்டோபர் 16 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்


யாழ்.நாவற்குழியில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு வீடமைப்பு அதிகார சபையினால் நிரந்தர காணிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாவற்குழியில் வீடமைப்பு அதிகார அமைப்புக்குச் சொந்தமான காணிகளில் குடியேறியுள்ள 137 சிங்கள குடும்பங்களில் 50 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக நிரந்தர காணிகள் வழங்கப்படவுள்ளன.

இதற்காக வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1.5 பரப்பு காணி வீதம் வழங்குவதற்காக செவ்வாய்க்கிழமை (15) காணி அளவிடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அவ்விடத்திற்கு கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வருகை தந்தபோது, காணி அளக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் அவ்விடத்தைவிட்டு அகன்றனர்.

தொடர்ந்து சிறிதரன் அம்மக்களுடன் சந்தித்துக் கலந்துரையாடினார்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .