2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஆசிரியையை தாக்கிய மாணவனின் தாய் கைது

Kogilavani   / 2013 ஒக்டோபர் 16 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

பாடசாலை நேரத்தில் ஆசிரியை தாக்கிய குற்றச்சாட்டில் மாணவனின் தாயொருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மல்லாகம் பகுதியில் உள்ள  பாடசாலையொன்றில் கல்விகற்கும் மாணவன் ஒருவர் கடந்த திங்கட்கிழமை (14) நாய்க்குட்டியொன்றை துரத்தியபோது அந்நாய்க்குட்டி பாடசாலை கிணற்றுக்குள் வீழ்ந்து மரணமானது.

தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (15) பாடசாலையில் நீர்த்தொட்டிக்கு நீர் இறைக்கும் போது கிணற்றில் நாய்க்குட்டியொன்று இறந்து கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக குறித்த மாணவன் ஆசிரியர் ஒருவரினால் அழைத்து விசாரிக்கப்பட்டதுடன், தாயாரை அழைத்து வரும்படியும் அறிவுறுத்தப்பட்டார்.

இந்நிலையில், பாடசாலைக்கு வந்த மாணவனின் தாயார் இவ்விடயம் தொடர்பாக ஆசிரியருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், குறித்த ஆசிரியை தாக்கியும் உள்ளார்.

சம்பவம் தொடர்பாக ஆசிரியை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததினையடுத்து சுன்னாகம் பொலிஸார் மாணவனின் தாயாரைக் கைதுசெய்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவனின் பெற்றோருக்கும் ஆசிரியைக்கும் தனிப்பட்ட ரீதியில் ஏற்கனவே பகைமையொன்று இருந்துள்ளதாக பாடசாலைச் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .