2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மலசலகூட குழியிலிருந்து மோட்டார் குண்டுகள் மீட்பு

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 16 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். விக்டோரியா வீதியிலுள்ள அழகுபடுத்தும் பயிற்சி நிலையமொன்றின்  மலசலகூட குழியிலிருந்து இன்று (16) புதன்கிழமை குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

6 மோட்டார் குண்டுகளும், ஒரு ஆர்.பி.ஜி ரக குண்டுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. பழைய மலசலகூடக் குழியினை தூர்வாறும் போதே மேற்படி குண்டுகள் இருந்தமை அவதானிக்கப்பட்டு இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

அவ்விடத்திற்கு வந்த இராணுவத்தினர் மேற்படி குண்டுகளை மீட்டுச் சென்றனர். குறித்த பகுதி இராணுவ முகாமாக பயன்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டில் அம்முகாம் அகற்றப்பட்டு மக்களிடம் இந்தப் பிரதேசம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .