2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வடமாகாணத்தின் முதலாவது பயிர் மருத்துவ முகாம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 16 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெகநாதன்


வடமாகாணத்தில் முதல்த் தடவையாக பயிர் மருத்துவ முகாம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இந்த முதலாவது பயிர் மருத்துவ முகாம புத்தூர், நிலாவரையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மேற்கொள்ளும் பயிர்ச் செய்கையில் ஏற்படும் நோய்களை அடையாளம் கண்டு  அவற்றைக்                                                                           குணப்படுத்துவதற்கும் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்காகவும் இந்தப் பயிர் மருத்துவ முகாம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் நாள் நிகழ்வில் விவசாயிகள் நோய் வாய்ப்பட்ட பயிர்களின் மாதிரிகள் மற்றும் மண் மாதிரிகளைக் கொண்டுவந்து காண்பித்து நோய்க்கான காரணிகளை  அடையாளம் கண்டுகொண்டுள்ளதுடன்,  அவற்றைக் குணப்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் பெற்றுச் சென்றுள்ளனர்.

இதற்கான நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், யாழ். மாவட்ட விவசாய பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறான பயிர் மருத்துவ முகாம் வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் சீரான கால இடைவெளிகளில் நடத்துவதற்கான ஒழுங்குகளைச் செய்யவுள்ளதாக வடமாகாண விவசாய பணிப்பாளர் சி.சிவகுமார் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .