2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

எனது இமாலய வெற்றி பறிக்கப்பட்டு விட்டது: அனந்தி

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 16 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


நடந்து முடிந்த வடமாகாண சபைத் தேர்தலில் இமாலய வெற்றியொன்றை நான் பெற்றிருக்கவேண்டிய நிலையில் சில ஊடகங்களின் செயற்பாட்டால் அந்த வெற்றி கிடைக்கவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தினால் உருவாக்கப்பட்ட தராகி சிவராம் ஞாபகார்த்த கேட்போர் கூடத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இமாலய வெற்றி எனக்கு கிடைக்காமை எனது வாழ்வில் விழுந்த பெரிய அடியாகும். இருந்தும் எனக்கு கிடைத்திருக்கும் இந்த வெற்றியும் ஊடகங்களினாலேயே கிடைக்கப்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அனந்தி சசிதரன் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்காக 87 ஆயிரத்து 870 வாக்குகள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .