2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வாழைக்குலைகளைத் திருடியவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 23 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ். புத்தூர் நவக்கிரி பகுதியில் வாழைக்குலைகளைத் திருடி  வாகனத்தில் கொண்டுசென்றதாகக் கூறப்படும் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.  

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு (22) புத்தூர் நவக்கிரி வீதியில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், வாழைக்குலைகளுடன் வந்த வாகனத்ததை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது வாகனத்திலிருந்த 12 வாழைக்குலைகளும் புன்னாலைக்கட்டுவன், ஈவினை பகுதிகளிலுள்ள தோட்டங்களிலிருந்து களவாக வெட்டப்பட்டு கொண்டு செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த நிலையில், வாகன சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபரை இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, தங்களது தோட்டங்களிலிருந்த வாழைக்குலைகள் களவாக வெட்டப்பட்டுள்ளதாக புன்னாலைகட்டுவன், ஈவினையைச் சேர்ந்த வாழைத்தோட்ட உரிமையாளர்கள் 8 பேர் அச்சுவேலிப் பொலிஸில் இன்று புதன்கிழமை காலை முறைப்பாடு செய்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .