2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஸ்ரீரெலோ கட்சியின் பெயரை தவறாகப் பயன்படுத்தியதாக முறைப்பாடு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 25 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

ஸ்ரீரெலோ கட்சியின் பெயரை ஒருவர் தவறாகப் பயன்படுத்தியதாக அக்கட்சியின் உறுப்பினரால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை (24) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அக்கட்சியின் உறுப்பினர் எஸ்.செந்தூரனே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த வாரம் நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்ற பிரச்சினையொன்றில் நபர் ஒருவர் தான் ஸ்ரீரெலோ கட்சியின் உறுப்பினர் எனக் கூறி அந்தப் பிரச்சினையிலிருந்து வெளியேறியுள்ளார்.

இதன் பின்னரே செந்தூரன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவரது முறைப்பாட்டில் எமது கட்சியின் காரியாலயம் தற்போது மூடப்பட்டுள்ளதுடன் கட்சியின் உறுப்பினராக தான் மட்டுமே இருப்பதாகவும் ஆகவே இவ்வாறாக கட்சியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்துபவர்களைக் கைதுசெய்யுமாறும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0

  • kumar Friday, 25 October 2013 04:25 PM

    ஸ்ரீ டெலொ வளர்க...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .