2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

சந்தேகநபரை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவு

Super User   / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

நாச்சிமார் கோவில் பெண்ணின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவரை விளக்கமறியலில் வைப்பகுமாறு உத்தரவிட்ட யாழ். நீதிவான் சந்தேகநபரிற்கு  டி.என்.ஏ பரிசோதனையும் மேற்கொள்ளுமாறும் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

யாழ். நாச்சிமார் கோவில் தேர் கட்டிடத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணப் பொலிஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆனைக்கோட்டை பிரதேசத்தினைச் சேர்ந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது, யாழ். நீதவான் சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அவரிடம் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .