2025 ஜூன் 23, திங்கட்கிழமை

தம்பிராசா மீண்டும் உண்ணாவிரதம்

Super User   / 2013 நவம்பர் 06 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வலி. வடக்கு மக்களின் வீடழிபபை எதிர்த்தும் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தியும் நாளை வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வட மாகாண சபை வேட்பாளர் தம்பிப்பிள்ளை தம்பிராசா இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இடமபெயர்ந்து முகாhம்களில் வாழும் மக்களின் வீடுகள் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்படுகின்றமையினை எதிர்க்கும் விதமாக யாழ். நகரில் உள்ள முனியப்பர் ஆலயத்தின் முன்பாக உண்ணாவிரத பேராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறினார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அனைவரையும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு தருமாறும் அவர் கேட்டுள்ளார்.

அத்துடன், வலி. வடக்கு மக்களின் வீடுகளை இடித்தழிப்பதை உடனடியாக நிறுத்துமாறும், அப்பகுதி மக்களை மீள்குடியேற்றம் செய்யுமாறும் வலியுறுத்தி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .