2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பேனை தொண்டைக்குள்; மாணவன் வைத்தியசாலையில்

Kanagaraj   / 2013 நவம்பர் 06 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

பேனை தொண்டைக்குள் ஏறியதனால் மாணவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

மாணவன் ஒருவன் பேனையினை வாயில் வைத்திருந்த வேளை மற்றொரு மாணவன் அவர் மீது தவறுலாக வீழ்ந்ததினாலே பேனை தொண்டைக்குள் சிக்கியுள்ளது.

தனியார் கல்வி நிலையம் ஒன்றில் நேற்று செவ்வாயக்கிழமை (05) இடம்பெற்ற இச்சம்பவத்தில் தெல்லிப்பளை துர்க்காபுரத்தினைச் சேர்ந்த ஜெயராஜ் டானியல் (08) என்ற மாணவனே இவ்வாறு படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்தவர் முதலில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .