2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நல்லூர் பிரதேச சபையின் வரவு-செலவு திட்டம் நிறைவேற்றம்

Super User   / 2013 நவம்பர் 06 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

நல்லூர் பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு -செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது பிரதேச சபை தவிசாளர் பரமலிங்கம் வசந்தகுமாரினால் 2014ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த வரவு - செலவு திட்டத்தினை ஆராய்ந்த ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி  உறுப்பினர்கள் வரவு செலவு திட்ட அறிக்கையினை ஏகமனதாக அங்கீகரித்தனர்.

நல்லூர் பிரதேச சபையின் நிதியில் இருந்து பிரதேச அபிவிருத்திக்காக 80.5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் பரமலிங்கம் வசந்தகுமார் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .