2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினரின் கடைக்கு தீ வைப்பு

Super User   / 2013 நவம்பர் 06 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா, நா.நவரத்தினராசா


வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினரின் வீட்டுடன் இணைந்த கடைக்கு இனந்தெரியாத நபர்களினால் இன்று புதன்கிழமை அதிகாலை தீ மூட்டப்பட்டுள்ளது.

அளவெட்டி அருணோதயா ஆரம்ப பாடசாலைக்கு அருகாமையிலுள்ள பிரதேச சபை உறுப்பினர் கந்தசாமி மயூரதன் என்பவரின் கடைக்கே தீ வைக்கப்பட்டுள்ளது. இனந்தெரியாத குழுவொன்று இன்று அதிகாலை வீட்டின் நுழைவாயில் கேற்றினை திறந்து கடைக்கு தீ மூட்டியுள்ளனர்.

இதனால் கடையிலிருந்த பட்டாசுகள் வெடித்த சத்தத்தினை கேட்டு வெளியில் வந்து பார்த்த போது கடை எரிந்துகொண்டிருப்பதனை அவதானித்ததாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தார். இந்த தீயினால் கடையிலிருந்த ஆவணங்கள் பல எரிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடாபில் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதினை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .