2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தம்பிராசா உண்ணாவிரதத்தில் குதிப்பு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 07 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


வலி. வடக்கு மக்களின் வீடழிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அங்கு மீள்குடியேற்றத்தை வலியுறுத்தியும் வடமாகாண சபையின் முன்னாள் வேட்பாளர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா இன்று வியாழக்கிழமையிலிருந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

யாழ்ப்பாணக் கோட்டைக்கு அருகிலுள்ள முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக இவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இதன்போது முத்தையாப்பிள்ளை தம்பிராசா தெரிவிக்கையில்,

வலிகாமம் வடக்கில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்துவருகின்ற மக்களின் வீடுகள் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்படுகின்றமையை நிறுத்துமாறு கோரியும் அங்கு  மக்களை மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தியும் தான் தற்போது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார்.

நாளை வெள்ளிக்கிழமை மாலை இந்த உண்ணாவிரதத்தை நிறைவுசெய்வதுடன், மேற்படி  விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடும் மகஜர் ஒன்றை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .