2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சந்திரசேகரப்பிள்ளையார் ஆலய விக்கிரங்கள் திருட்டு

Kanagaraj   / 2013 நவம்பர் 09 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்,எஸ்.கே பிரசாத்


யாழ். கல்வியங்காட்டில் அமைந்துள்ள சந்திரசேகரப் பிள்ளையார் ஆலயத்தில் 2.5 இலட்சம் பெறுமதியான விக்கிரங்கள் நேற்று வெள்ளிக்கிழமை (08) இரவு திருடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஆலய நிர்வாகத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி ஆலயத்தின் பூசகர் இன்று காலை சனிக்கிழமை (09) பூஜை செய்வதற்காக ஆலயத்திற்கு வந்தபோது வாசல் கதவுபூட்டு உடைக்கப்பட்டு ஆலயத்திலிருந்து வெண்கல சிலைகள் திருடப்பட்டுள்ளமை தெரியவந்தது.

இதனையடுத்தே அவர் ஆலய நிர்வாகத்திற்கு அறிவித்தார். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .