2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சட்ட ஆலோசனைகள் தொடர்பான பயிற்சிப் பட்டறை

Menaka Mookandi   / 2013 நவம்பர் 11 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


சட்ட உதவி ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் சட்ட ஆலோசனைகள் தொடர்பான பயிற்சிப் பட்டறை கோப்பாய் நாவலர் தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று திங்கட்கிழமை (11) நடைபெற்றது.

கோப்பாய் பிரதேச செயலாளர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சிப்பட்டறையில் நீதிமன்ற நடைமுறைகள், சட்ட ஆவணங்களைப் பேணல், குடும்ப வன்முறைச் சட்டம், காணிப் பிரச்சனைகள் தொடர்பான சட்டம், பொலிஸாருடனான அணுகுமுறை தொடர்பில் காணப்படும்  சிக்கல்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய சட்ட ரீதியான ஆலோசனைகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

இப்பயிற்சி பட்டறையில் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .