2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பசுவை வெட்டிய இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 12 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சட்டவிரோதமாக பசுவை இறைச்சிக்காக வெட்டியதாகக் கூறப்படும் இருவரை  யாழ். குற்றத்தடுப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

யாழ். நாவாந்துறை, கொட்டடிப் பகுதியில் பசுமாடு ஒன்று இறைச்சிக்காக வெட்டப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து  சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இவர்கள் இருவரையும் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் விசாரணையின் பின்னர் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .