2025 ஜூன் 23, திங்கட்கிழமை

இந்தியத் துணைத்தூதுவர் - எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 12 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


இலங்கைக்கான இந்தியத் துணைத்தூதுவர் வே.மகாலிங்கம் மற்றும் வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர்களான றிஸ்வான் பதியுதீன், அனிஹமகே ஜெயதிலக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, புதிதாக மாகாண சபையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு துணைத் தூதுவரினால் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டதுடன், இந்தியாவினால் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் வீடமைப்புத் திட்டங்கள், மக்கள் நலன்சார் திட்டங்கள் மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களை பற்றி கலந்துரையாடினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .